Skip to content
Home » ஆ.ராசா எம்பி மீது திருச்சி அதிமுக புகார்.. உள்ளிட்ட க்ரைம் செய்திகள்..

ஆ.ராசா எம்பி மீது திருச்சி அதிமுக புகார்.. உள்ளிட்ட க்ரைம் செய்திகள்..

  • by Senthil

புரோட்டோ மாஸ்டர் கருகி பலி

திருச்சி அரியமங்கலம் காவேரி நகர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (42). இவர் பொன்மலைப்பட்டி பொன்னேரி புரத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 10ம் தேதி மது அருந்திவிட்டு ஓட்டலில் உள்ள அறையில் தூங்கினார். அப்போது தனது அருகில் கொசுவர்த்தி சுருளை பற்ற வைத்திருந்தார். கொசு வர்த்தி நெருப்பு ஷாஜ கான் படுக்கையில் பரவி தீப்பிடித்தது. இதில் மேலும் தீ பரவி ஷாஜகான் மீது பிடித்தது. இதில் படுகாயம் டைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆ ராசா எம்பி மீது அதிமுகவினர் புகார்..

திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார், அதில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 25ந் ந தேதி திமுக சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ ராசா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ஒன்றை நான் யூடியூப் சேனல் வழியாக பார்க்க நேரிட்டது. இதனை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர்.
இவ்வாறு எம்ஜிஆர் குறித்து அவதூறு பரப்பிய ஆ ராசா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் மேலும் அந்த பதிவினை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். மனு அளித்த போது வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், சசிகுமார், ஜெயராமன், சுரேஷ், மாதவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்..

 

ஆட்டோ டிரைவரை தாக்கிய பாஜக நிர்வாகி உட்பட 5 பேர் மீது வழக்கு

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் முஷரத் (36) ஆட்டோ டிரைவரான இவர் டி எம் எஸ் ஆட்டோ சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் இவர் திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவரிடம் ரூபாய் 10 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். பிரவீன் குமார் திருச்சி பாஜக பொது செயலாளராக உள்ளார். கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்துள்ளது.  இந்நிலையில் கடந்த 10 ந்தேதி முஷரப் கெம்ஸ் டவுன் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு 5 பேருடன் மற்றொரு ஆட்டோவில் வந்த பிரவீன் குமார் முஷ்ரப் ஆட்டோவை வழி மறித்து நிறுத்தி முஷ்ரப்பிடம் தான் கொடுத்த கடன் பணத்தை திருப்பி கேட்டு தகராறு ஈடுபட்டுள்ளார். அதற்கு முஷ்ரப் கடன் பணத்தை ஏற்கனவே கொடுத்துவிட்டேன். ஏன் என்னிடம் பிரச்சனை செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் குமார் முஷ்ரப்பை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. மேலும் பிரவின் குமார் முஷ்ரபுக்கு கொலை மிரட்டல் விடுதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முஷ்ரப் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பாஜக நிர்வாகி பிரவீன் குமார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10ம் வகுப்பு மாணவி தற்கொலை ஏன்?..

திருச்சி ஜாபர்ஷா தெரு,கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் ஸ்வேதா (14) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2023 ம் ஆண்டு நிமோனியா காய்ச்சல் வந்து கடுமையாக பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குணமாகி வந்த பிறகு அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு 2 கால்களும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பதவன்று எருக்கன் செடியை சாப்பிட்டுள்ளார் இதனால் கால் வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து ஸ்வேதா ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி ஸ்வேதா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!