திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள மேரிஸ் பாலம் சுமார் 150 ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை மேற்கொள்ளும் வகையில் புதிய பாலம் ரூபாய் 34.10 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி புதிய பாலத்தில் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் உள்ள கம்பரசம்பேட்டைக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் பகுதியில் புதிய பறவை பூங்கா கட்டுமான பணிகளையும் ஒரு ரூபாய் 13.70 கோடி திட்ட மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்தியாவிலேயே இரண்டாவதாக ஆரம்பிக்கப்படும் இந்த பறவைகள் பூங்கா 4ஏக்கர் பரப்பளவில்
திட்டமாக உள்ளது. இதில் சுமார் 1.2ஏக்கர் பரப்பளவில் புதிய பறவைகள் அமைய உள்ளது. பூங்கா சுமார் ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், பாலை, முல்லை, நெய்தல் ஆகியவை குறிக்கும் வகையில் உள்ளே பணிகள் நடைபெற உள்ளது.
இந்து சுமார் 2000 பறவைகளை காணும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த பூங்காவில் சிறிய வகை
குரங்கு, முதலை உள்ளிட்ட பல்வேறு அரிய வகை வனவிலங்குகளும், இமு போன்ற பெரிய வகையான கோழிகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும் பூங்காவில் சிறுவருக்கான பூங்கா உணவிடமும் அமையப்பட உள்ளது. இந்த பூங்கா போனது சுமார் மூன்று அல்லது நான்கு மாதம் பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஊரக ஊரக வளர்ச்சி சார்பாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது
இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் துறை அதிகாரிகள் திமுகவினர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என் நேரு…
திருச்சியில் உயர் மட்ட பாலம் மற்றும் மெட்ரோ உள்ளிட்ட இரண்டு திட்டங்களுமே செயல்படுத்தப்படும்.
உயர் மட்ட பாலம் அமைக்கலாம் என்று திட்டம் வகுத்தபோது ஏதும் இடையூரு இருக்க கூடாது என்பதால் தான் மெட்ரோ குறுக்கிட்டார்கள். தற்போது மெட்ரோ நிர்வாகம் அதற்கான தடையில்லா சான்றை வழங்கி விட்டது.
மேரிஸ் மேம்பாலத்தை பொறுத்த வரை ரயில்வே துறையின் பங்கும் இருப்பதால் அடுத்த மூன்று மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெறும்.
பஞ்சப்பூரில் அமைய இருக்கும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புதிய ஐடி காரிடார்,உயர்மட்ட பாலங்கள் என அனைத்து வகையிலும் திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநரின் நிலைபாடு குறித்த கேள்விக்கு ? சப்ஜக்ட் இன் சுப்ரீம் கோர்ட் என்று கடந்து சென்றார்.