தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள பெரியார் சிலை முன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார் அண்ணாமலையின் உருவப்படத்தை கிழித்து, எரித்து கோஷமிட்டனர்.
இதில் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில செயலாளர் கே ஆர் ராஜலிங்கம், மாநிலபொதுச்செயலாளர் ஜி.கே.முரளி உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.