Skip to content

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

திருச்சி,
சங்கிலியாண்ட புரம் நாவலர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் இவரது மனைவி சுலோக்சனா (வயது 61)இவர் கடந்த
16 ந்தேதி வீட்டின் முன்பு கோலம் போட சென்றார். அப்பொழுது திடீரென்று வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் சுலோசனா இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில்

ரியல் எஸ்டேட் புரோக்கர் உள்பட 2 பேரின் வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

திருச்சி கருமண்டபம் வசந்தா நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 51) இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்து வருகிறார். இவர் கடந்த 16 ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கடைக்கு இரவு டிபன் வாங்க சென்று உள்ளார்
.பிறகு வீட்டிற்கு வந்த பொழுது வீட்டில் மின் விளக்கு எரியாமல் இருந்தது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த ராஜன் உடனடியாக எலெக்ட்ரிசனை அழைத்து வந்து மின்விளக்கை எரிய செய்தார். பிறகு வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். பிறகு ராஜன் வீட்டின் உள்ளே அறையை சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 20 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது அப்பொழுது தான் ராஜன் வீட்டில் மர்ம ஆசாமி புகுந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து ராஜன் உடனடியாக செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் மற்றும் மோப்ப நாய் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட தீவிர சோதனை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜன் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து 20 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை வலைவிசி தேடி வருகின்றனர்.
இந்த மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது ராஜன் வீட்டை பூட்டி விட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று திருச்சி கருமண்டபம் ராம் நகர் 4வது குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 50) இவர் கடந்த 13 ந்தேதி பொங்கல் பண்டிகையை
கொண்டாட தனது சொந்த ஊரான துறையூருக்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்று கிராம் தங்க நகை திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயன் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

திருச்சி கருமண்டபம் வசந்தா நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 51) இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்து வருகிறார். இவர் கடந்த 16 ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கடைக்கு இரவு டிபன் வாங்க சென்று உள்ளார்
.பிறகு வீட்டிற்கு வந்த பொழுது வீட்டில் மின் விளக்கு எரியாமல் இருந்தது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த ராஜன் உடனடியாக எலெக்ட்ரிசனை அழைத்து வந்து மின்விளக்கை எரிய செய்தார். பிறகு வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். பிறகு ராஜன் வீட்டின் உள்ளே அறையை சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 20 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது அப்பொழுது தான் ராஜன் வீட்டில் மர்ம ஆசாமி புகுந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து ராஜன் உடனடியாக செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் மற்றும் மோப்ப நாய் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட தீவிர சோதனை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜன் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து 20 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை வலைவிசி தேடி வருகின்றனர்.
இந்த மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது ராஜன் வீட்டை பூட்டி விட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!