படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கார் டிரைவர் சாவு
திருச்சி ஜூலை 23- திருச்சி கே கே நகர் மங்கம்மா சாலை கிருஷ்ணமூர்த்தி நகர் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27) இவர் கார் டிரைவர்.
சமீப காலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 21ந்தேதி மணிகண்டன் வீட்டின் படிக்கட்டில் ஏறும் பொழுது திடீரென்று
வழுக்கி கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் மணிகண்டனை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் ஏற்கெனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக கூறினார்.இது
குறித்து உடனடியாக கேகே நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு… 2 பெண்கள் கைது
திருச்சி ஜூலை 23- திருச்சி மாவட்டம் மன்ணச்சநல்லூர் மணியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தனசேகர் இவரது மனைவி கலையரசி (வயது 38)இவர் நேற்று சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வயலூர் முருகன் கோவிலுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கலையரசி அருகே இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது பஸ் தெப்பக்குளம் பஸ் நிறுத்தம் அருகில் வரும் பொழுது திடீரென்று கலையரசி கழுத்தில் இருந்த 2 1/4 பவுன் தங்க நகையை அருகில் நின்ற இரண்டு பெண்களும் பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓட முயன்றனர். இதனைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட கலையரசி சத்தம் போடவே அருகில் உள்ள பொதுமக்கள் இரண்டு பெண்களையும் பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் மேற்கண்ட இரண்டு பெண்களிடம் விசாரணை செய்த போது திருச்சி மாவட்டம் மணப்பாறை நாயக்கன் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி அர்ச்சனா (வயது 29) முத்தம்மாள் (வயது 28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பெண்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 1/4 பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.
தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு.. பெண் கைது..
திருச்சி திருவானைக்காவல் தேவர் காலனி சேர்ந்தவர் தமிழரசன் இவரது மனைவி கஸ்தூரி (வயது 48) இவருடைய தாய் அஞ்சலையம்மாள் (வயது 85) இவரை பார்த்துக் கொள்ள திருவரங்கத்தில் உள்ள தனியார் ஹோம் மூலம் ஒரு பெண்ணை நியமன செய்திருந்தார். கடந்த 22ந்தேதி வீட்டில் இருந்த கஸ்தூரி வெளியே சென்றார். அப்பொழுது வீட்டில் அஞ்சலை அம்மாள் மற்றும் வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண் இருவர் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் அஞ்சலை அம்மாள் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு இருந்த பெண் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துகொண்டு அஞ்சலையம்மாள் அருகில் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை திருடிக்கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்.பிறகு வீட்டுக்கு வந்து பார்த்த கஸ்தூரி தாயின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகை காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு பணிப்பெண் இருக்கிறாரா என்று பார்த்த பொழுது அவர் காணவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த கஸ்தூரி உடனடியாக திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஸ்தூரியிடம் விசாரணை நடத்தி விட்டு அவர்கள் வீட்டில் பணி பெண்ணாக பணிபுரிந்த கோவை அஞ்சம்பட்டியை சேர்ந்த புஷ்பராஜ் என்பது மனைவி கிருத்திகா ஸ்ரீ (வயது 51) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் அஞ்சலை அம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை திருடியது ஒப்புக்கொண்ட எடுத்து திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்திகா ஸ்ரீயை கைது செய்துள்ளனர்.
உறையூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற வாலிபர் கைது
திருச்சி புத்தூர் பாத்திமா தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அதே தெரு பகுதியை சேர்ந்த அரவிந்தராஜன் (வயது 37) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 18 கிலோ புகையிலைப் பொருட்கள் மட்டும் ரூபாய் 20000 பணத்தை பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்தராஜனை கைது செய்துள்ளனர்.