திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வழிகாட்டுதலின்படி கூத்தைப்பார் பேரூராட்சியில் விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களான, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு,
மின் கட்டண உயர்வு, மற்றும் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்ரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூத்தைப்பார் பேரூராட்சி கழக செயலாளர் P.முத்துக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னிலை பொறுப்பினை திருவரம்பூர் ஒன்றிய கழக செயலாளர்கள் S.S.ராவணன் SKD.கார்த்திக் மற்றும் பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்பிரமணியன் A.தண்டபாணி K.S.பாஸ்கர்
என்கிற கோபால்ராஜ் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் N.கார்த்திக், ஆகியோர் வகித்தனர். மேலும் நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் KS.பாஸ்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.சுரேஷ்குமார், மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக, பேரூர் கழக, பகுதி கழக வட்ட கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.