திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 420 நியாய விலை குடும்ப அட்டைகள் உள்ளது. இதுவரை இந்த கிராமத்திற்கு நியாய விலை கடைசெயல்பட எந்தவொரு கட்டிடமும் இல்லாமல் இருந்து வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 1969 ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிகமாக நியாய விலை கடை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கட்டிடமும் சிதிலமடைந்து. பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே புகுவதால் நியாய விலை கடைகளில் உள்ள பொருட்கள் மழை நீரில் நனைந்து சேதம் அடைகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அண்புமனி இராமதாஸிடம் புதிய நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி தரும்படி பாமக மேற்கு மாவட்ட செயலாளர் பிரின்ஸ் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை பரிசீலித்த நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கு ரூ 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். மேலும் மேட்டுப்பட்டி கிராமத்தில் 5 புதிய உயர் கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது செயல்பட்டு வரும் நியாய விலை கடை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கி வருகின்றனர்.