டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் படுகாயம்…

161
Spread the love

மதுரையை சேர்ந்த தியானேஷ் என்ற கல்லூரி மாணவர், தனது நண்பருடன் வாடிப்பட்டியில் இருந்து மதுரை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வாடிப்பட்டி பழைய நீதிமன்றம் அருகே சென்றபோது எதிரே வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு டூவீலர் மீது அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.

cctv

இந்த விபத்தில், கல்லூரி மாணவர் தியானேஸ், அவரது நண்பர் மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த  தேச புனிதன், சந்திரன் ஆகிய 4 பேரும் ரோட்டில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த விபத்து சம்பவம் அங்குள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

LEAVE A REPLY