Skip to content
Home » டூவீலரில் அதிவேக சாகச ரீல்ஸ்….. இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…..

டூவீலரில் அதிவேக சாகச ரீல்ஸ்….. இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…..

கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மொபட் பந்தைய வாகனத்தில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று, சாகசத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக அண்மையில் பிரபல யூட்யூபர் டி டி எப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் கரூரைச் சேர்ந்த பைக் பாண்டியன் என்ற

இளைஞர் விழா காலங்களில் பந்தயத்துக்கு பயன்படுத்தப்படும் மொபட் இருசக்கர வாகனத்தில் கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று, சாகசம் செய்து அதை செல்போனில் படம்பிடித்து ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இவர் தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் மொபட் ரேஸ் நடைபெறும் இடங்களில் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் இயக்கி சாகசத்தில் ஈடுபட்ட அந்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!