Skip to content

வடகாடு மோதலில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாடு கிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.   அப்போது வீடு சேதப்படுத்தப்பட்டது. இந்த பிரச்னை குறித்து  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.  தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தலைவர் நீதியரசர்  ச.தமிழ்வாணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் மு.அருணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ,துணைத்தலைவர் இமயம் (வெ.அண்ணாமலை), உறுப்பினர்கள் க.ஆனந்தராஜா, பொ.இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மோதலின்போது, பாதிப்பிற்குள்ளாகியவீட்டின் உரிமையாளருக்கு நிவாரணத் தொகையாகரூ46,000/-க்கான  காசோலையை,  நீதிபதி தமிழ்வாணன்
வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

error: Content is protected !!