அரியலூர் மாவட்ட திமுக சார்பில் அரியலூர் புறவழிச் சாலையில் கலைஞர் அறிவாலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ். சிவசங்கர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இதில் தலைமையேற்று கலந்து கொண்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, கலைஞர் அறிவாலயம் அமைத்திட அடிக்கல் நாட்டி கல்வெட்டினை திறந்து வைத்து, பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்…
வீட்டை விட்டே வெளியே வராதவர்களுக்கு எல்லாம் பத்திரிக்கையாளர்கள் நடந்தார், நிற்கிறார், போகிறார் என விளம்பரப்படுத்துகின்றனர்.
இத்தனை திட்டங்களை தந்து கொண்டிருக்கும் முதலமைச்சரை விட ஒரு நல்லாட்சியை அவர் தருவார் என்றா நம்புகின்றீர்கள்? ஒருவரும் இதை நம்ப மாட்டார்கள். கழகம் தான் வெற்றி பெறும் அப்படி வெற்றி பெறுவதற்கு முதல் கூட்டமாக அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தொண்டர்கள் வந்திருப்பது ஒரு முன்னுதாரணம்.
இந்த ஆட்சியில் திட்டங்களை செய்து தர எவ்வளவோ சிரமங்கள். ஒன்றிய அரசு நமது எந்த திட்டத்தையும் பணம் ஒதுக்காது, திட்டத்தை செயல்படுத்த விடாமல் செய்கிறது.
ஆனாலும் எந்த திட்டத்தையும் நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தும் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவோம் என தொண்டர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.

