அண்ணன், தம்பி குடும்பத்துக்கும் மட்டும் இவ்வளவு சொத்தா..? பட்டியல பாருங்க..

3576
Spread the love

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரினை தொடர்ந்து அவர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல நூறுகோடி சொத்து ஆவணங்கள் மற்றும் 25 லட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. இந்த சோதனையின் இறுதியாக 2016-ல் இருந்து 2021-ம் ஆண்டு வரை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்த போது அவரும் அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோரின் பெயர்களில் வாங்கி குவித்த சொத்துக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி விஜயபாஸ்கருக்கு கடந்த 2016ம் ஆண்டு  1.55 கோடியாக இருந்த சொத்து மதிப்பு 2021ம் ஆண்டு அதாவது அமைச்சரான பிறகு 4 கோடியாகியுள்ளது. அதேபோல் அவரது மனைவி விஜயலட்சுமிக்கு கடந்த 2016ல் 96 லட்சத்திற்கு சொத்து இருந்துள்ளது. 4.53 கோடியாக உயர்ந்துள்ளது. விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் சொத்து மதிப்பு 2016ல் 1.53 கோடியாக இருந்தது. 2021ல் அவரது சொத்து மதிப்பு 6.75 கோடியாகியுள்ளது. சேகரின் மனைவி சாந்தி க்கு 15 லட்சம் சொத்து இருந்துள்ளது. இது 5 ஆண்டுகளில் 2.15 கோடியாக உயர்ந்துள்ளது.  இப்படியாக அண்ணன், தம்பி மற்றும் அவர்களின் மனைவிமார்களின் சொத்து மதிப்பு 4.21 கோடியில் இருந்து 17.41 கோடியாக உயர்ந்துள்ள விபரம் தெரியவந்துள்ளது. அந்த வகையில் விஜயபாஸ்கர் தனது வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீதத்திற்கும் அதிகமாக சொத்து குவித்துள்ள விபரமும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதில் வேதனை என்னவென்றால் விஜயபாஸ்கரின் தந்தை, தாயார் மற்றும் உறவினர்களின் சொத்து குவிப்பு விபரங்கள் சேகரித்து வருவதாகவும் அதன் பிறகே முழு விபரம் தெரியவரும் என்கின்றனர் லஞ்ச ஒழிப்பு போலீசார். நிலை இப்படி இருக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுவது தான் மிகப்பெரிய ஜோக் என்கின்றனர் அதிகாரிகள்.. . 

LEAVE A REPLY