Skip to content

தமிழ்நாடு அரசு தலைமை காஜி மறைவுக்கு விஜய் இரங்கல்

தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி மறைவுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய தலைமை அலுவலகம் எனத் தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர்.

அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!