Skip to content

கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல்: நைஜீரியாவில் 30 பேர் பலி

நைஜீரியா நாட்டின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள கசுவான்-தாஜி கிராமத்திற்குள் துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென புகுந்து கிராம மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

அந்த பகுதியிலுள்ள உள்ளூர் சந்தை மற்றும் பல வீடுகளை இடித்து தள்ளி சேதப்படுத்தியும் சென்றனர். இதில், குறைந்தது கிராமவாசிகள் 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். தவிரவும் பலர் கடத்தப்பட்டு உள்ளனர் என போலீசார் இன்று தெரிவித்தனர்.

எனினும் இந்த எண்ணிக்கையை உள்ளூர்வாசிகள் 37 என்றும் பாதிரியார் ஒருவர் 40 என்றும் கூறுகிறார். உடல்கள் அவர்களின் கண் முன்னே கிடக்கின்றன. ஆனால், பாதுகாப்பு இன்றி அந்த பகுதிக்கு எப்படி செல்ல முடியும் என பெயர் வெளியிட விருப்பம் இல்லாத நபர் ஒருவர் கூறுகிறார்.

நைஜீரியாவில் அடர்ந்த வன பகுதிகளில் பதுங்கி கொண்டு, இதுபோன்ற துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் அடிக்கடி தாக்குதல்களில் ஈடுபட்டு பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

error: Content is protected !!