Skip to content

சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

இந்தியா,  பாகிஸ்தான் இடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது.  போர்க்காலங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய உள்துறை உத்தரவிட்டு உள்ளது.

இந்த ஒத்திகை பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள குஜராத், பஞ்சாப், காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் அசாம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக நடத்தப்பட உள்ளது.  மற்ற மாநிலங்கிளல் முக்கிய இடங்களில் ஒத்திகை நடத்தப்படும். சென்னை,  கல்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் இந்த ஒத்திகை நாளை நடக்கிறது. இந்தியா முழுவதும்  மொத்தம் 244 மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.

error: Content is protected !!