மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடக்கிறது. இதையொட்டி நேற்று முதல் தமிழகம் முழுவதும் பலத்த காற்று வீசி வருகிறது. திருச்சியிலும் இன்று காலை முதல் கடுங்குளிர்காற்று வீசுகிறது. வழக்கமாக திருச்சியில் மணிக்கு 8 முதல் 10 கி.மீ வரை காற்று வீசும். ஆனால் இன்று 30 முதல் 35 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. கடுங்குளிருடன் காற்று வீசுவதால் ரோட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.