Skip to content

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு…திருச்சி க்ரைம்…

லாரி மோதி முதியவர் சாவு., திருச்சி மே 3- திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 72) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேட் மன்னார்புரம் ஜி கார்னர் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாரத விதமாக சிராஜுதீன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சிராஜுதீன் தலையில் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சிராஜுதீன் சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.   டூவீலரை திருடிய வாலிபர் கைது … திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் ( 34 )இவர் நேற்று பால் பண்ணை மதுபான கடை அருகில் டூவீலரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் இதனை நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக சரவணன் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பால் பண்ணை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 24)என்பது தெரியவந்தது.மேலும் இவர் தான் சரவணனின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றார் என தெரிய வந்தது. இதையடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பாவை கைது செய்து அவரிடமிருந்து டூவீலரை பறிமுதல் செய்துள்ளனர்.   ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 40) இவர் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காககருவூரிலிருந்து திருச்சி வந்தார். பிறகு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி செல்லும் பேருந்தில் ஏறினார். அப்பொழுது அவர் கையில் ஒரு பை வைத்திருந்தார். பஸ்சில் ஏறிய சில நிமிடங்களில் அந்த பை அவரிடம் இருந்து காணாமல் போய்விட்டது.அந்தப் பையில் 4 பவுன் நகை மற்றும் 8,500 பணம் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இந்த சம்பவம் குறித்து விஜயலட்சுமி கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயலட்சுமியிடம் 4 பவுன் நகை மற்றும் 8,500 பணத்தை திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பாக்கெட்டில் இருந்த பர்ஸ் காணவில்லை இதனை பார்த்து அதிர்ச்சடைந்த அப்பெண்போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். .
error: Content is protected !!