அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான சுகாதார பராமரிப்புப் பணிகள் தொடா்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 50 இடங்கள் சோ்க்கைக்கு அரசு அனுமதித்துள்ளது.
அதன்படி பிளஸ்2 முடித்தவா்களுக்கு அவசர சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநா் படிப்பு 7 இடங்கள், டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநா் படிப்பு 10 இடங்கள், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநா் படிப்பு 6 இடங்கள், தியேட்டா் தொழில் நுட்ப வல்லுநா் படிப்பு 7 இடங்கள், எலும்பியல் தொழில்நுட்ப வல்லுநா் படிப்பு 10 இடங்களும், 10 ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கு பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் படிப்பு 10 இடங்களும் உள்ளன.
இந்தப் படிப்புகளில் சேர டிசம்பா் 31, 2025 அன்று 17 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். இச்சான்றிதழ் படிப்பில் சேர விருப்பம் உள்ளவா்கள் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப்.12 வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி நிா்வாக அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டு அதனை பூா்த்தி செய்து செப்.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.