திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன் (34). ரியல் இவர் ரியல் எஸ்டேட் அலுவலக ஊழியர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் லால்குடியை சேர்ந்த எசனைக்கோரை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிதடி ஏற்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் தாமரைச்செல்வன் மாநகராட்சி பள்ளிக்கு குழந்தையை விட்டுவிட்டு திரும்பி வரும்போது பீமநகர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வழிமறித்த சதீஷ், ஸ்ரீரங்கத்தை சேர்நத ரவுடி பிரபாகரன்(30) உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் துரத்தினார்கள். உயிரை காப்பாற்றிக்கொள்ள தாமரைசெல்வன் போலீஸ் குடியிருப்பு ஒன்றில் வீட்டிற்குள் புகுந்தார். ஆனாலும் விரட்டி வந்த அந்த கும்பல் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வௌட்டிவிட்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பாலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு நிகழ்சிக்காக தமிழக மமுதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்த நிலையில் போலீஸ் குடியிருப்பில் புகுந்து வாலிபர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி போலீஸ் குடியிருப்பில் வாலிபர் வெட்டிக்கொலை… ரவுடிகள் வெறிச்செயல்
- by Authour

