Skip to content

2024

சமயபுரம் சுங்கச்சாவடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கப் பேரவை சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நேற்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »சமயபுரம் சுங்கச்சாவடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிரிழப்பு.. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, மண்ணச்சநல்லூா் மேல காவல்காரத்தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கா்  ( 60). வீட்டுமனை வணிகத் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி முத்துலெட்சுமி (48). பாஸ்கா் தனது வீட்டில் தண்ணீா் பிடித்து கொண்டிருந்த போது… Read More »கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிரிழப்பு.. திருச்சியில் பரிதாபம்…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்ப உற்சவம்….

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி இன்றுடன்(20-ந்தேதி) நிறைவடைகிறது. தெப்பத்திருவிழாவையொட்டி தினமும் நம்பெருமாள்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்ப உற்சவம்….

ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள் தமிழகம் வருகிறது

  • by Authour

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்து விட்டார். சசிகலா, அவருடைய… Read More »ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள் தமிழகம் வருகிறது

பிரதமர் மோடி 2 நாள் ….. தமிழகத்தில் சுற்றுப்பயணம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை  சென்னையில் நேற்று அளித்த பேட்டி:  தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பாக நேரம் வரும்போது பேசுவோம். அதற்கு இன்னும் நேரம் உள்ளது. வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக… Read More »பிரதமர் மோடி 2 நாள் ….. தமிழகத்தில் சுற்றுப்பயணம்

பிளஸ்2 ஹால் டிக்கெட்…… இன்று பிற்பகல் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது.இது… Read More »பிளஸ்2 ஹால் டிக்கெட்…… இன்று பிற்பகல் பதிவிறக்கம் செய்யலாம்

இன்றைய ராசிபலன்…. (20.02.2024)

செவ்வாய்கிழமை மேஷம் இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ரிஷபம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனையால் மன உளைச்சல் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மிதுனம் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கடகம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய வேலைகள் காலதாமதமாக முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சிம்மம் இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும். கன்னி இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினை குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். துலாம் இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும். விருச்சிகம் இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். தனுசு இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்து லாபத்தை அடைய முடியும். மகரம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும். கும்பம் இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். பணபற்றாக்குறை நீங்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மீனம் இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கடைசி நேரத்தில் கைக்கு கிடைக்காமல் போகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சலும், ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடையலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும்.

2 கோடி உறுப்பினர் இலக்கு… நிர்வாகிகளுக்கு தவெக தலைமை கழகம் உத்தரவு…

  • by Authour

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்… Read More »2 கோடி உறுப்பினர் இலக்கு… நிர்வாகிகளுக்கு தவெக தலைமை கழகம் உத்தரவு…

சக்கர நாற்காலியில் அமர வைத்து கலெக்டரிடம் மனு அளித்த மாற்றுதிறனாளி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் முகமது அலி (54). இரண்டு கால்களும் ஊனமான நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி. இவர் நேற்று கலெக்டர் அலுவலக வராண்டா முகப்பில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய… Read More »சக்கர நாற்காலியில் அமர வைத்து கலெக்டரிடம் மனு அளித்த மாற்றுதிறனாளி…

காட்டு மிராண்டியாக கலக்கும் அருண் விஜய்….மிரட்டும் ‘வணங்கான்’ டீசர்

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று,… Read More »காட்டு மிராண்டியாக கலக்கும் அருண் விஜய்….மிரட்டும் ‘வணங்கான்’ டீசர்

error: Content is protected !!