Skip to content

செய்தி மக்கள் தொடர்புத் துறையில் 4 இணை இயக்குநர்களுக்கு கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி வரும் 4 இணை இயக்குநர்களுக்குக் கூடுதல் இயக்குநர்களாகப் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம்:

  1. திரு. K. தமிழ் செல்வராஜன்: இணை இயக்குநர் (நினைவகங்கள்) பிரிவிலிருந்து அதே பிரிவில் கூடுதல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  2. திரு. M. மேகவர்னம்: இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) பிரிவிலிருந்து கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) ஆகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  3. திரு. K. மாறன்: மாண்புமிகு முதலமைச்சர் அலுவலக இணை இயக்குநராக இருந்த இவர், அதே அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  4. திருமதி. P. கலைமதி: இணை இயக்குநராக இருந்த இவர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) கூடுதல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
error: Content is protected !!