பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக பிரித்து தரக்கோரி அங்குள்ள பலுச் அமைப்பினர் பல வருடங்களாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் அவ்வப்போது வன்முறையாகவும் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் இன்று காலை குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய மர்ம நபர்கள் சிலர், பயணிகளை சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தினா. அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர்.
”பலியானவர்கள் உடல்கள் குண்டு துளைத்த காயங்களுடன் மலைகளில் கண்டெடுக்கப்பட்டன” என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.