Skip to content

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி..? பரபரப்பு தகவல்கள்..

  • by Authour

இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியி (62) ஈரானில் கடந்த 31ம் தேதி மர்மான முறையில் கொல்லப்பட்டார். ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இஸ்மாயில் ஹனியி தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தபோது மர்மான முறையில் கொல்லப்பட்டார். விருந்தினர் மாளிகையில் இஸ்மாயில் தங்கி இருந்த அறையில் அதிகாலை 2 மணியளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த சம்பவத்தில் இஸ்மாயில் ஹனியி மற்றும் அவரது உதவியாளர் உயிரிழந்தனர். ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் இஸ்மாயில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், தெஹ்ரானில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் தங்கி இருந்த அறை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அந்த தாக்குதலிலேயே இஸ்மாயில் உயிரிழந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை இஸ்மாயில் தங்கி இருந்த அறை மீது ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் 7 கிலோ வெடிமருந்து நிரப்பட்டுள்ளது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்மாயில் தங்கி இருந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே இருந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் படுகொலையை அரங்கேற்றியுள்ளதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, இஸ்மாயில் தங்கி இருந்த விருந்தினர் மாளிகையின் அறையில் 2 மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டு வைக்கப்பட்டதாகவும், அந்த வெடிகுண்டு 31ம் தேதி நள்ளிரவு வெடிக்கவைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. அந்த வெடிகுண்டு அமெரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்டு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டை சேர்ந்தவர்கள் இஸ்மாயில் தங்கி இருந்து அறையில் 2 மாதங்களுக்கு வைத்ததாக தகவல் பரவியது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!