தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
