Skip to content

பலுசிஸ்தான் தனி நாடாக பிரகடனம்

பாகிஸ்தானின்  மேற்கு பகுதியில்  உள்ளது  பலுசிஸ்தான் மாகாணம்.  இது பாகிஸ்தானின்  பெரிய(44 சதவீத பரப்பு) மாநிலம்.  இங்குள்ள  மக்கள்  பலூச்  எனப்படுகிறார்கள். இந்த மாநிலத்துக்கு பாகிஸ்தான் எந்தவித வளர்ச்சி பணிகளையும் செய்வதில்லை. அதே நேரத்தில் இங்குள்ள கனிம வளங்களை மட்டும் வெட்டி எடுத்து  சீனாவுக்கு அனுப்பி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த மக்கள் போராடி வருகிறார்கள். இதற்காக பலூச் விடுதலை ராணுவம் (Baloch Liberation Army),  என்ற அமைப்பை உருவாகி  பாகிஸ்தான் ராணுவத்துடன் போராடி வருகிறார்கள்.  தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்  ஒரு ரயிலை கடத்தி பாகிஸ்தான் ராணுவத்தினர் பலரை கொன்று குவித்தனர். இந்த நிலையில்  பலூச் ராணுவ அதிகாரிகள்,   இன்று  பலுசிஸ்தான் இன்று முதல் தனி நாடாக செயல்படும் என அறிவித்து  உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் ஐநாவுக்கும் தங்கள்  அறிவிப்பினை தெரிவித்து உள்ளனர். பலுசிஸ்தானின் பல பகுதிகளை பலுச் கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் அங்குள்ள அரசு அலுவலகங்களில் பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர்.
இந்திய ஊடகங்களும், யூடியூபர்களும் இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாக குறிப்பிட வேண்டாம் என்றும் குறிப்பட்டுள்ள மிர் யார் பலுச், நாங்கள் பலுசிஸ்தானியர்கள். பலுசிஸ்தான் குடியரசாக தங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா  அனுமதி தர வேண்டும் என்றும் ஐநாவும் தங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பலுசிஸ்தான் விடுதலைப் படையினரின் இந்த அறிவிப்பு பாகிஸ்தான் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசியலிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பலுச் படையினரின் இந்த விடுதலை மற்றும் தனி நாடு அறிவிப்பு குறித்து பாகிஸ்தான் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.
error: Content is protected !!