Skip to content

அதிமுக மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு..

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராமத்தில் வசித்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன். இவர் ஆரணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சேவூர் கிராமத்தில் உள்ள எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், மதுரை உசிலம்பட்டியில் உள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது. மதுரை உசிலம்பட்டியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. 2016 – 2021 வரை உசிலம்பட்டி எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் சோதனை நடக்கிறது.

error: Content is protected !!