Skip to content

அரியலூர்.. சாலையில் தேங்கிய நீரில் குளித்து நூதன போராட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி -கல்லாத்தூர் சாலை பழுதாகி கரடு முரடான போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையை உள்ளது மாநில நெடுஞ்சாலையாக மாற்றி தரம் உயர்த்தி சாலையை செப்பனிட கோரி வீடுகள் தோறும் கருப்புக்கொடி போராட்டமும், சாலையில் நாற்று நடும் போராட்டமும், கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டமும், கிராமங்கள் தோறும் பஸ் நிறுத்தங்களில் கருப்புக் கொடி கட்டி போராட்டமும், காத்திருப்பு போராட்டமும் என பல கட்ட போராட்டம் நடத்தியும், வெட்டியார்வெட்டு கிராமத்தில் இருந்து புறப்பட்டு மீன்சுருட்டி கடைவீதி வரை தலையில் வெள்ளை தொப்பி அணிந்து கிராமம் தோறும் கோஷம்  எழுப்பியவாறு நடை பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் மீன்சுருட்டி – கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக உயர்த்தவும், சாலையை அகலப்படுத்தி சாலையை செப்பனிட வலியுறுத்தி குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் இன்று சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் குளித்து அரசுக்கு வினோதமாக கோரிக்கை வைத்துள்ளார்.

error: Content is protected !!