திருச்சி ஜமால் முகமது கல்லூயின் பவளவிழா ஆetண்டின் தொடக்க விழா மற்றும் புதிய கட்டட திறப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். ஆய்வு கூட்டம், அரசியல் பணி என பிசியாக இருந்தாலும், மாணவர்களை பார்க்கும்போது உற்சாகம் வருகிறது. மாணவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நான் உடனே ஓகே சொல்லிவிடுவேன். இந்த கல்லூரிக்கு நான் வருவது இது முதல் தடவை அல்ல. நான் கல்லூரி நிறுவனர் நாள் விழாவில் பங்கேற்று உள்ளேன். இன்று திறக்கப்பட்ட புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் வீடியோவில் பங்கேற்றேன். இப்போது அதன் திறப்பு விழாவில் பங்கேற்று உள்ளேன்.
கல்லூரி பிரண்ட் ஷிப் எல்லா காலத்திலும் தொடரும். அது சமூகத்திலும் எதிரொலிக்கும். நல்லிணகத்தை உருவாக்கி, இந்து, முஸ்லிம், கிறித்தவர்கள் படித்து முன்னேற இந்த கல்லூரி தொடங்கினர். கல்லூரி தொடங்கி இன்று 75 ஆண்டுகள் ஆகி உள்ளது. இந்த கல்லூரி தொடங்கியவர்களைப்பற்றி நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லணும்.
காந்தியிடம் ஒரு பிளாங் செக் கொடுத்த வள்ளல் தான் இந்த கல்லூரி தொடங்கிய வள்ளல்களில் ஒருவர் . காந்தி வழி, அம்பேத்கார் வழி, பெரியார் வழி என பல வழிகள் உள்ளது. மாணவர்கள் கோட்சே கூட்டத்தின் வழியில் போய் விடக்கூடாது. இந்த கல்லூரியை என்ன நோக்கத்துக்காக உருவாக்கினார்களோ அதற்கு ஏற்ப நடக்கிறது. கல்லூரி நிர்வாகிகள் , ஆசிரியர்கள் எல்லோரையும் நான் பாராட்டுகிறேன். சமூக அக்கறையுடன் மாணவர்கள் வளர வேண்டும். தரமான கல்வியை கொடுப்பதால் தான் இந்த கல்லூரி அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.
யுஜிசி நிதி அளித்து உள்ளது. நீங்கள் விமானத்தில் பயணிக்கும்போது பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசும்போது நீங்கள் எந்த காலேஜ் என்றால் நான் ஜாமல் என்று பெருமையோடு சொல்லலாம். சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக இந்த கல்லூரி திகழ்கிறது- இந்த கல்லூரி மாணவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த கல்லூரியில் படித்தவர்கள் தான். பல நீதிபதிகள் இங்கு படித்து உள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகள் படித்து உள்ளனர்.
நான் இங்கு அரசியல் பேசவில்லை. ஆனால் மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும். இந்த கல்லூரி முன்னாள் மாணவர் காதர் மொய்தீன் அவர்கள், இன்று தகைசால் தமிழராக உயர்ந்து நிற்கிறார். அவரும் இந்த கல்லூரி மாணவர் தான். அவருக்கு விருது வழங்குவதில் நானும், இந்த அரசும் பெருமை கொள்கிறோம். நீங்களும் பெருமை கொள்வீர்கள்.
படிப்புதான் மாணவர்களின் நிலையான சொத்து. நாம் , இந்த அரசு செய்யும் சாதனைகள் உங்களுக்கு தெரியும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பலர் பயன்பெற்று வருகிறார்கள். கல்லூரி கனவு, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இன்னார் தான் படிக்க வேண்டும் என்று இருந்ததை மாற்றி இன்று எல்லோரும் படிக்கிறார்கள். ஓரணியில் தமிழ்நாடு என மாணவர்கள் திரள வேண்டும். உங்களுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எப்போதும் துணை நிற்பான். இஸ்லாமியர்களுக்கு திமுக துணை நிற்கும். நான் உங்களுக்கு இந்த உறுதியை தருகிறேன். கல்வி தான் பறிக்க முடியாத சொத்து. அதை வழங்க திராவிட மாடல் அரசு தயாராக இருக்கிறது. விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் தர உள்ளோம். எங்கள் திட்டங்களுக்கு நீங்கள் உதவணும். உங்களுக்கும் நாங்கள் உதவியாக இருப்போம். கல்லூரி முதல்வருக்கு ஸ்பெஷல் நன்றி.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் கே. என். நேரு, கோவி செழியன், மகேஸ், மெய்யநாதன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் காதர் மொகிதீன், மற்றும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினம் வரவேற்றார். கல்லூரி தலைவர் ஜமால் முகமது பிலால், செயலாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முகமது மற்றும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பலரும் கலந்து கொண்டனர்.