துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் நடந்தது. இதில் இந்தியா கூட்டணி பேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இதை கார்கே அறிவித்தார். சுதர்சன் ரெட்டி ஆந்திராவை சேர்ந்தவர். அவருக்கு வயது 79
சுதர்சன் ரெட்டி 1946 ம் ஆண்டு ஆந்திராவின் கங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினம் தாலுகாவில் உள்ள அகுலா மைலாரம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் . உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்த ரெட்டி , கோவாவின் முதல் லோக்ஆயுக்தாவும் ஆவார்.
ஜனநாயக விழுமியங்களையும், நீதித்துறையின் நேர்மையையும் வலுப்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் என்றும் கார்கே கூறினார்.
நீதிபதி ரெட்டி தனது பதவிக்காலத்தில் பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அரசியலமைப்பு கொள்கைகளுக்கு அவர் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தவர். அவரது நியமனம் அனைத்துக் கட்சிகளாலும் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அவர் ஒரு சிறந்த நீதிபதி. மேலும், அவர் ஒருமித்த கருத்தை உருவாக்கக்கூடிய தலைவர் என்று நம்பப்படுகிறது.