தஞ்சாவூர் மாவட்டத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா, மல்லிகைப்பூ அலங்கார ஆடம்பர தேர்பவனி, ஏராளமான பக்தர்கள் தேர் பவனியில் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமைவாய்ந்த பூண்டிமாதா பேராலயம் அமைந்துள்ளது. பசிலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்தில் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒருபகுதி இக்கோவிலில் பக்தர்களின் அருளிக்கமாக வைக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா கடந்த 30ந் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் திருப்பலிகள்
நடைபெற்றது, அதைப்போல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று 8ந் தேதி இரவு நடைபெற்றது, மல்லிகை பூ மற்றும் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட இந்த தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் புனிதம் செய்து தேரினை தொடங்கி வைத்தார், அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் மரியே வாழ்க என பக்தி கோஷமிட்டு மாதாவை வழிபட்டனர். இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாதா கோவிலை மீண்டும் வந்தடைந்தது. இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.