கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழா பணிகளை நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே என் நேரு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு திருச்சி
மாவட்டத்திலிருந்து அதிகபடியாக மாநாட்டிற்கு உறுதுணையாக சிறப்பாக கலந்து கொள்வோம். 2026 சட்டமன்ற தேர்தல் ஆரம்பத்திற்கு அஸ்திவாரத்தை முதலிலே செந்தில் பாலாஜி அமைத்துள்ளார் . நிச்சயமாக வெற்றி பெறும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருச்சி வருகை தந்து உறுதிமொழி எடுத்த பின்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார். மாநில மாநாடு காலை ஏழு மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். அதைவிட சிறப்பாக முப்பெரும் விழா நடைபெறும்.