1977ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் போத்தீஸ் என்ற பெயரில் ஜவுளிக் கடை ஒன்றை கே.வி.பி.சடையாண்டி போத்தி மூப்பனார் தொடங்கினார். சிறிய அளவில் தொடங்கிய இந்த நிறுவனம், இன்று 98 ஆண்டுகள் பிறகு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு போத்தீஸ் ஜவுகடையை ஆரம்பித்த கே.வி.பி.சடையாண்டிபோத்தி மூப்பனார் தன்னுடைய 84 வயதில் உயிரிழந்தார்.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது போத்தீஸ் உரிமையாளரின் இரு மகன்கள் வசிக்கும் ஈசிஆர் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 12 அதிகாரிகள் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சோதனையின் போது, வருமானம் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், முதலீட்டு பதிவுகள் உள்ளிட்டவை விரிவாக பரிசோதிக்கப்படுவதாகவும், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) நீலாங்கரையில் அமைந்துள்ள போத்தீஸ் உரிமையாளரின் மகன்கள் போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகியோரின் வீடுகளில் இன்று (செப்.12) காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை சுமார் 7.20 மணியளவில் 12 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு இரண்டு வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டது.
திடீர் சோதனையால் அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டிலிருந்து வந்த முதலீடுகள், வங்கி கணக்கு விவரங்கள், நிலம் மற்றும் சொத்து கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் ஆகியவை கவனமாகச் சேகரிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.