தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பண்டாரவாடை திருமஞ்சன வீதியில் பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது .
பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் தலைமை வகித்தார்.
மாவட்ட சிறுப்பான்மையினர் நல பிரிவு துணை அமைப்பாளர் ராயல் முகமது அலி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி தட்சிணாமூர்த்தி., மாவட்ட துணைச் செயலாளர் கோவி .அய்யாராசு , பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன்,
அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் குமார்,
பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், மெலட்டூர் பேரூர் செயலாளர் சீனு, பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர்
சுமதிகண்ணதாசன்,
மாநில அயலக அணி துணைச் செயலாளர் விஜயன், மாவட்ட பிரதிநிதி ராமபிரபு,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்..
முடிவில் மாவட்ட பிரதிநிதி தமிழ்வாணன் நன்றி கூறினார்.