Skip to content

நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்

நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது . சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அவருக்கு வழங்குகிறார்.

கடந்த 1965-ம் ஆண்டு வெளியான ’காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். 1967-ல் வெளியான ’கந்தன் கருணை’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.

இவர் கடைசியாக 2001-ல் வெளியான அஜித், ஜோதிகாவின் ’பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் நடித்திருந்தார். சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது நடிப்பை நிறுத்திவிட்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில்,சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

error: Content is protected !!