Skip to content

ஏவிஎம் சரவணன் உடலுக்கு ரஜினி அஞ்சலி

  • by Authour

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏவிஎம் நிறுவனத்தில் நடிகர் ரஜினி நடித்த படங்கள்… ராஜா சின்ன ரோஜா , முரட்டுகாளை , நல்லவனுக்கு நல்லவன் , பாயும் புலி, ஆகிய படங்களில் ரஜினி நடித்தது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!