கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 7.49 கோடி மதிப்பீட்டில் 22 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்துள்ளார்.
வேலுச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பராமரிப்பு பணிகள், வார்டு எண் 1ல் திருவள்ளுவர்நகர் கோதூர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
, சின்ன கோதூர் வடக்குத் தெருவில் சின்டெக்ஸ் டேங்கஅமைக்கும் பணி, மழை நீர் வடிகால் மற்றும்

சிறுபாலம் அமைக்கும் பணி,வார்டு எண் 1ல் என்.எஸ்.பி நகரில் மயாளத்திற்கான சுற்றுச்சுவரை உயாத்தும் பணி, நகர் சமுதாய கூடத்தில் சமையல் அறை அமைக்கும் பணி,பெரிய குளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணி தொடக்க விழா மற்றும் சிறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகள் மாநகராட்சி மேயர் கவிதா, அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.

