புதுக்கோட்டை, ஜன.08- வெனிசுலா அதிபர் சாவேஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவப் பொம்மையை எரித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், கி.ஜெயபாலன், டி.சலோமி, மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.அசோகன், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் அ.மணவாளன், மாநகர செயலாளர் எஸ்.பாண்டியன் உன்ளிட்டோரும் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், அரிமழம் ஒன்றிய செயலாளர் ஆர்.வி. ராமையா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

