தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள குடித்தெருவில், 52-ஆவது ஆண்டாக சிறப்பான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவின் ஒரு பகுதியாக ஓட்டப்பந்தயம், லெமன் ஸ்பூன், பானை உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், சைக்கிள் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற போட்டியாக, இளைஞர்களுக்கான குறிப்பிட்ட இடத்தை சுற்றி நிற்காமல் செல்லும் சைக்கிள் போட்டி நேற்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 19 பேர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடந்த போட்டியில் 16 பேர் பாதியிலேயே வெளியேறினர். மீதமுள்ள 3 பேர், இரவு பகல் பாராமல் சுமார் 24 மணி நேரத்தை கடந்து இடைவிடாமல் சைக்கிள் ஓட்டிக்கொண்டே இருந்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
உணவு அருந்தாமல், ஜூஸ் வகைகளை மட்டும் அருந்தி இடைவிடாமல் சைக்கிள் போட்டி நடைபெற்று வருகிறது.
இறுதியாக நிற்காமல் சைக்கிள் ஓட்டும் நபருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகையின் பாரம்பரியத்தையும் இளைஞர்களின் உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் இந்த விழா, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

