டூவீலர் திருட்டு
திருச்சி கருமண்டபம் ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் முல்லை செல்வன் (40. ) இவர் கடந்த 19-ந்தேதி காந்தி மார்க்கெட் காய்கறிகள் கமிஷன் மண்டியில் தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது டூவீலரை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக நேற்று முன்தினம் அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த காட்டூர் பிரியங்கா நகரை சேர்ந்த ஞானேஷ் குமார் (56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்றதாக துவாக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த இளவரசன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் கோவில் தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேக் பரித் ( 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் அரசு மருத்துவமனை, செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக மண்ணச்சநல்லூர் நொச்சியம் பகுதியை சேர்ந்த சண்முகம் (25) காட்டூர் பகுதியை விஜய ராகவன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

