சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி ஒரு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இன்னொரு பெண்ணும் ஞானசேகரன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் ஞானசேரன் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த ஞானசேரன் 2 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
