உலக அளவில் ஸ்மார்ட்போன் மற்றும் கணினி தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஆப்பிள் நிறுவனம், பழைய கூகுள் குரோம் (Google Chrome) பதிப்புகளைப் பயன்படுத்துவதால் சைபர் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதால், அதற்குப் பதிலாக ஆப்பிளின் சொந்த பிரவுசரான ‘சபாரி’ (Safari) உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் என அந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையில், உரிய பாதுகாப்பு அப்டேட்கள் இல்லாத குரோம் பிரவுசர்களைப் பயன்படுத்த வேண்டாம் என கூகுள் நிறுவனமும் தனது பயனர்களை எச்சரித்துள்ளது.
சைபர் தாக்குதல்களைத் தவிர்க்க, பயனர்கள் தங்களது இணைய பிரவுசர்களை அவ்வப்போது லேட்டஸ்ட் பதிப்பிற்கு புதுப்பித்து (Update) பயன்படுத்த வேண்டும் எனத் தொழில்நுட்ப நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

