Skip to content

அரியலூர்… கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் சிறையில் அடைப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றங்கரை நீரேற்றும் நிலையம் அருகில் கடந்த 29.05.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டம், விளாங்குடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் நவீன்குமார்(20/25) என்பவரை அரியலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் வழக்கு பதிந்து, கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இவர் காவல்துறையினரால் கெட்ட நடத்தைக்காரர் என்று அடையாளம் காணப்பட்டவர். மேலும் இவர் மீது பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நவீன்குமார் வெளியே வந்தால் மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், சமூகத்திற்கு கேடு விளைவிக்க கூடும் என்பதாலும் எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின்படி சிறையில் அடைக்க அரியலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சித்ரா அவர்கள் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் I.P.S., மேல் பரிந்துரையின் அடிப்படையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி நவீன்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்கள். இதன் அடிப்படையில் அதற்கான ஆணை பிரதிகள் திருச்சி மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.

error: Content is protected !!