Skip to content

அரியலூர் அடைக்கல மாதா தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

உலக புகழ்பெற்ற அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது புனித அடைக்கல அன்னை தேவாலயம்.

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி தைப்பொங்கல் தினமான இன்று ஆலய வளாகத்தில் பொங்கல் விழாவை தொடங்கி வைத்த பங்குத்தந்தை தங்கசாமி மக்கள் அனைவரும் என்றென்றும் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தார். ஜெப வழிபாட்டுடன் தொடங்கிய பொங்கல் விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட மேற்பட்ட கிறிஸ்தவ பெண்கள் புதுப்பானையில் பச்சரிசி கொண்டு சர்க்கரை பொங்கல் மற்றும் வெண்பொங்கல் வைத்து புனித அடைக்கல அன்னையை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!