Skip to content

பட்டுக்கோட்டை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மழை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆடி திருவிழாவை ஒட்டி சென்ற ஆறாம் தேதி துவங்கி கரைக்காரர்கள் மண்டகப்படிகள் நடந்தது.  அதனைத் தொடர்ந்து பால்குடம், சடல் காவடி, பறவைக்

காவடி, என ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தனர் . இரவு புஷ்பா பல்லாக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர் . அதனைத் தொடர்ந்து அம்பாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடி பெருந்திருவிழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் அறங்காவலர் குழு தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் அறங்காவலர்கள், திருவிழா கமிட்டியாளர்கள் செய்தனர்.

error: Content is protected !!