தமிழகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்டங்கள் விளையாட்டுப் போட்டிகள் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என பொதுமக்களுக்கு வழங்க வருகின்றனர் இதை அடுத்து பொள்ளாச்சி தெற்கு நகர செயலாளர்

அமுத பாரதி ஏற்பாட்டில் கோட்டூர் ரோட்டில் பந்தல் அமைக்கப்பட்டு 5000 பேருக்கு சமபந்தி விருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மு கண்ணப்பன் வழங்கினார் இதில் கலந்து கொண்ட

பொதுமக்களுக்கு சூடாக சிக்கன் பிரியாணி வறுவல் கேசரி பழம் பீடா என இலையில் வைக்கப்பட்டது இந்த சமபந்தி விருந்து அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர் இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் மருத்துவர் மகேந்திரன், நகராட்சித் தலைவர் சியாமளா , வடக்கு நகர செயலாளர்

நவநீதகிருஷ்ணன் மற்றும் கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் வார்டு கவுன்சிலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் பொள்ளாச்சி நகரத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு இதுவே முதல் முறையாக 5000 பேருக்கு சமபந்தி விருந்து வழங்கியதாக தெற்கு நகர செயலாளர் அமுத பாரதி தெரிவித்தார்.

