ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அரியலூர் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்துயும், மயில் காவடி, பறவை காவடி எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
ஆடி மாத கடைசி வெள்ளி க்கிழமையை முன்னிட்டு அரியலூர் நகராட்சி பால்பண்ணை அருகில் உள்ள காளியம்மன் கோவிலில் காலை
முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், தீச்சட்டி ஏந்தியும், அழகு குத்தியும், மயில் காவடி, பறவை காவடி, பால்குடம் எடுத்தும் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்தனர். மேளதாளம் முழங்க பக்தி பரவசத்துடன் பக்தர்கள் எடுத்து வந்த பாலால் காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் காளியம்மனுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாரதனை காட்டப்பட்டது.
திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு காளியம்மனை தரிசனம் செய்தனர்.
இது போன்று அரியலூர் நகரில் சிங்கார தெருவில் உள்ள மகாசக்தி மாரியம்மன், காபேரியில் தெருவில் உள்ள மகாகாளி அம்மன், மற்றும் தேசமுத்து மாரியம்மன், கங்கை முத்து காளியம்மன், கோவில்களில் ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.