திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பனிமனை எதிரே தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் ஓய்வு பெற்றவர்கள் சார்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து TNSTC – திருச்சி கரூர் மண்டல தலைவர் சிங்கராயர் தலைமையில் இந்த தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2003 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தோர் ஓய்வூதியமும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை ஒப்பந்தத்துடன் முடிந்து போகும் பிரச்சனைகள் அல்ல, எதிர்கால வாழ்வாதத்திற்காக அடிப்படை கோரிக்கைகள் வென்றிட தொடர்ந்து முழக்கங்கள் இட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும் போக்குவரத்து துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு முறையான பணிகளை வழங்க வேண்டும், 23 மாத கால ஓய்வூதிய பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள்
பெறும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு, குறைந்தபட்சம் ஓய்வூதியம் உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக கடந்த தேர்தலின் போது திமுக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் வழங்குவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றப்படவில்லை பழைய ஓய்வு திட்டம் கோரி அனைத்து துறை ஊழியர்களும் போராடி வருகின்றனர். ஆகையால் உடனடியாக மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த மாதம் 18ம் தேதியிலிருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என எச்சரித்தனர்.
திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின் படி அனைத்து சலுகைகளையும் அரசு ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். இல்லையென்றால் வருகின்ற 2026 ஆம் தேர்தலில் நாங்கள் வாக்குகளை மாற்றி அளிப்போம் என திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.