காஞ்சி சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். காஞ்சி சங்கர மட பக்தர்களின் வேண்டுகோளின்படி 71- வது மடாதிபதியை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் அண்ணாவரம் பகுதியை சேர்ந்த துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச ஷர்மா திராவிட் எனும் இயற்பெயரை கொண்ட கணேச சர்மா திராவிட் காஞ்சி சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தெலுங்கானா மாநிலம் பாசரா பகுதியில் உள்ள ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் சேவையாற்றியுள்ளார்.
அட்சய திருதியை நாளான இன்று காலை 6 மணிக்கு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள பஞ்சகங்கா குளத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,கணேச ஷர்மா திராவிட்டுக்கு சன்யாச தீட்சை வழங்கி இளைய மடாதிபதியாக நியமித்து ஆசி வழங்கினார். கணேச சர்மா திராவிட்டின் பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆகும்.
தீட்சை பெற்றதும், கணேச சர்மா திராவிட்டுக்கு சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று, பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர் சூட்டினார்.