பூச்சி கடித்து முதியவர் சாவு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஷீலா நகரை சேர்ந்தவர் சின்னையா (60) . இவர் சம்பவத்தன்று செட்டிப்பட்டி கொம்பை வாய்க்கால் பகுதியில் சென்று வந்த போது அவரை திடீரென்று ஒரு பூச்சி கடித்துவிடுகிறது.இந்த சம்பவத்தில் அவரது வாயிலிருந்து நுரை தள்ளி மயங்கி விழுந்தார்.
இதையடுத்து சின்னையா ஆபத்தான நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சின்னையா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கார் டிரைவர் தற்கொலை
திருச்சி பொன்னேரிபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (25). இவர் கார் டிரைவர். இந்நிலையில் கடந்த சில மாத காலமாக முத்துராமலிங்கம் டிரைவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாய் முத்துராமலிங்கத்தை அடிக்கடி திட்டி உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று தனது தாயிடம் முத்துராமலிங்கம் செலவுக்கு பணம் கேட்டு உள்ளார். அவர் தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முத்துராமலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துராமலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குளியல் அறையில் வழுக்கி விழுந்து முதியவர் சாவு
திருச்சி மரக்கடை நரசிம்ம நடுத்தெருவை சேர்ந்தவர் மோகன் வயது 72 இவர் நேற்று வீட்டில் குளியலறைக்கு சென்ற பொழுது திடீரென்று மயங்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து மோகன் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்தி்ரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
மின் கம்பத்தில் மோதி வாலிபர் சாவு
திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (48). இவர் தனது டூவீலரில் கோனக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று இரு சக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தில் மோதியது.இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் போலிநகையை அடமானம் வைத்த தொழிலாளி மாயம்
மனைவி போலீசில் புகார் திருச்சி நவம்பர் 10 திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி வயது 43 இவர் நகை தொழிலாளி.நிலையில் நகை தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.இந்நிலையில் இவர் கடந்த 30 ஆம் தேதி தன்னிடம் இருந்த ஒரு நகையை எடுத்து பகுதியில் உள்ள நகை கடையில் அடமானம் வைத்துரூபாய் 40 ஆயிரம் பணத்தை வாங்கி சென்று உள்ளார்.இந்த நிலையில் மீண்டும் அடை கடைக்கு வந்து ஒரு மோதிரத்தை கொடுத்து அடகு வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதனைப் பார்த்த அடகு கடையின் உரிமையாளர் ஏற்கனவே நீங்கள் போலீ நகையை வைத்து பணத்தை வாங்கி சென்று உள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.அதற்கு காந்தி அந்த பணத்தை திருப்பி தருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற காந்தி மீண்டும் விடு திரும்பவில்லை.மாறாக அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சண்முகப்பிரியா பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காந்தியை தேடி வருகின்றனர்.

