கரூர் மாவட்டம், வெங்கமேடு செங்குந்த நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த உமாபதி – மல்லிகா தம்பதியினரின் இரண்டு வயது மகன் கிருத்திக். இன்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரை கதவு தானாகவே தாளிட்டு பூட்டிக் கொண்டது.
இதனால் பூட்டிய அறைக்குள் குழந்தை சிக்கிக்கொண்ட நிலையில், பெற்றோர்கள் கதவை திறக்க முடியாமல் தவித்தனர். உடனடியாக கரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, டோர் ஓபனர் கருவியை பயன்படுத்தி, இரண்டே நிமிடங்களில் பூட்டிய கதவை திறந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர்கள் பெருமூச்சு விட்டனர். மேலும், தங்களது குழந்தையை பத்திரமாக மீட்டு கொடுத்த தீயணைப்பு துறையினருக்கு பெற்றோர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

